• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

வேப்பமரத்தில் பால் வடிந்த அதிசயம்..! கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு..,

ByKalamegam Viswanathan

Dec 9, 2023

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட கச்சிராயிருப்பு கிராமத்தில் மந்தை அருகே உள்ள செல்வ விநாயகர் கோவில் முன்பு உள்ள வேப்பமரத்தில் மூன்று நாட்களாக பால் வடிந்த அதிசயம் நிகழ்ந்தது அங்கிருந்த பெண்கள் வேப்ப மரத்திற்கு மஞ்சள் பூசி குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரித்தனர் இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று அந்த வேப்ப மரத்தின் முன்பாக கிராம மக்கள் சார்பாக பொங்கல் வைத்து வேப்பமரத்திற்கு பட்டு பாவாடை செலுத்தி மாலைகள் அணிவித்து பெண்கள் தீர்த்த குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பெண்கள்குலவை போட்டு சாமியாடினர் ஏற்பாடுகளை கட்சிராயிருப்பு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.