புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்றது இதில் அமைச்சர் ரகுபதி ஆட்சியர் அருணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் குறைகள் ஆகியவற்றை அமைச்சர் மற்றும் வாரிய தலைவர் ஆகியோர் கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மகளிர் உரிமை திட்டம் விடியல் பேருந்து நலம் காக்கும் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் இந்தியாவிற்கு முன்னோடி திட்டமாக திகழ்ந்து வருகிறது. இது அனைவருக்கும் தெரியும்மேலும் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பெண்களுக்கு முழு பாதுகாப்பு இருக்கிறது என இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் கூறிவரும் நிலையில் ஆனால் ஒரு சில bro களுக்கு மட்டும் இது தெரியவில்லை அவர் பலரிடம் நன்கு கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் கொடுக்கும் கோரிக்கை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று தான் முதல்வருக்கு ஆசை ஆனால் நீங்கள் அரசின் கஜானாவை நினைத்து பார்க்க வேண்டும்
இருப்பினும் அதையும் மீறி பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றி வருகிறார் என பேசினார்.