புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா திருமயம் தொகுதி வார்பட்டு ஊராட்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, தொகுதி பொறுப்பாளர் முத்துக்குமார், ஒன்றிய கழக செயலாளர் அடைக்கலமணி நகர செயலாளர் அழகப்பன், ஆலவயல் முரளிசுப்பையா, சாமிநாதன் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில் வார்ப்பட்டு சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனர்.
