தென்காசி அருகே மனைவியிடம் கள்ளக்காதலில் ஈடுபட்டவர் கல்லால் அடித்துக் கொலை செய்தவரை போலீசார் கைதுசெய்து விசாரணை செய்துவருகின்றனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி காலாடி வடக்குத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் பாலகிருஷ்ணன் (29) .காலாடி நடு தெருவைச் சேர்ந்ததங்கராஜ் மகன் நந்து என்ற கணேசன்(23) இவரது மனைவி சக்தி மாரி (21) பாலகிருஷ்ணனுக்கு சக்தி மாரிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது இதை பலமுறை கண்டித்த கணேசன் நேற்றிரவு பாலகிருஷ்ணனை செங்கல்லால் தாக்கியுள்ளார். வலி தாங்க முடியாமல் பாலகிருஷ்ணன் கீழே சாய்ந்தார் பின்னர் அவர் நெஞ்சில் ஏறி உட்கார்ந்து செங்கல்லால் தாக்கி உள்ளார். அதனால் சம்பவ இடத்திலேயே பாலகிருஷ்ணன் உயிரிழந்தார். இச்சம்பவம் அறிந்த புளியங்குடி இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் கணேசனை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர் இதனால் புளியங்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது