• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஒத்த ஓட்டில் மலர்ந்தது தாமரை..!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் ஒட்டுமொத்தமாக 12,838 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 60.7 சதவீத வாக்குகள் பதிவாகின. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் பேரூராட்சி 3-வது வார்டில் திமுக சார்பில் சுரேஷ், பாஜக சார்பில் கோபிநாத், அதிமுக சார்பில் தர்மலிங்கம், அமமுக சார்பில் ராமசாமி ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில், பாஜக வேட்பாளர் கோபிநாத் 174 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆளுங்கட்சியான திமுகவைச் சேர்ந்த வேட்பாளர் 173 வாக்குகள் பெற்றார். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பாஜகவின் கோபிநாத் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளருக்கு 5 வாக்குகளும், அமமுக வேட்பாளர் 51 வாக்குகளும் பெற்றனர்.