• Thu. Mar 28th, 2024

மிக நீண்ட சந்திர கிரகணம்…580ஆண்டுகளுக்கு பின் தோன்றியுள்ளது..

Byகாயத்ரி

Nov 20, 2021

வானியல் அற்புதமான உலகில் மிக நீண்ட சந்திர கிரகணம் கடந்த 580 ஆண்டுகளுக்கு பிறகு வானில் தோன்றியுள்ளது.


சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம். பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும். நடப்பாண்டின் கடைசி சந்திர கிரகணம் நேற்று (நவ.19) அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தென்பட்டது.


நேற்று காலை 11:32 மணி முதல் மாலை 05:34 மணிவரை தோன்றியது இந்த சந்திர கிரகணம். மேற்கு ஆப்ரிக்கா, மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பகுதிகளை உள்ளடக்கிய சில பகுதிகளிலும் கிரகணம் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் வட மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் பகுதி சந்திர கிரகணம் நன்றாகத் தெரியும் எனவும் வட கிழக்கு ஐரோப்பா, ரஷ்யா போன்ற நாடுகளில் குறிப்பிட்ட பகுதி மக்கள் நிகழ்ந்த வானியல் அற்புதத்தை மக்கள் கண்டு ரசித்தனர். இந்தியாவில் இந்த சந்திர கிரகணம் தென்படவில்லை.


சுமார் 580 ஆண்டுகளுக்கு பிறகு இத்தகைய நீண்ட சந்திர கிரகணம் தோன்றியுள்ளது. மீண்டும் இதுபோன்ற நீண்ட நேர கிரகணம் 2,669ஆம் ஆண்டு ஏற்படும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *