• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மருத்துவர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

Byவிஷா

Apr 10, 2024

மதுரையில் உள்ள மருத்துவர் ஒருவர் வீட்டில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியதில், ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
மதுரை மாநகர் கேகே நகர் பகுதியில் தனியார் மருத்துவமனை நடத்திவரும் மருத்துவர் மோகன். இவரது வீடு மற்றும் மருத்துவமனையில் நேற்று (செவ்வாய்க் கிழமை) மாலை 6 மணி முதல் இரவு 11.50 மணி வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஐந்தரை மணி நேரத்துக்கும் மேலாக வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைக்குப் பின்னர் ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். மதுரையில் வருமான வரி சோதனை நடத்தப்பட்ட வீடு ராமநாதபுரம் பகுதி எம்எல்ஏ ஒருவரின் உறவினர் வீடு என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் மருத்துவர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் வருமானவரித் துறையினர் அவரிடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.