• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவில் அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவம்.

Byadmin

Jul 10, 2021

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் க்கு பாராட்டுகள் குவிந்த வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள திக்கணங்கோடு பகுதியிலுள்ள தெங்கன்திட்டை விளையை சேர்ந்தவர் கணேஷ். ஆட்டோ டிரைவரான இவரது மனைவி அனிதா (28) இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்து இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது இந்நிலையில் இரண்டாவது ஆக அவரது கர்ப்பமுற்ற மனைவி அனிதாவை சொந்த ஊரிலிருந்து ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.பின்னர் கர்ப்பிணிக்கு வயிற்ற வழி ஏற்பட்டதால் பெரிய ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என மருத்துவர் தெரிவித்த நிலையில் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து வரவழைத்த பின்னர்.அங்கிருந்து நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் போது வழியில் பிரசவவலி அதிகமானது.உடனே ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் பெரிய மருத்துவருக்கு தகவல் தெரிவித்து தொலைப்பேசியில் மருத்துவரின் ஆலோசனையை மேற்கொண்டு ஆம்புலன்சில் இருந்தப்படியே மருத்துவ உதவியாளர் கார்த்தியாயினி கர்ப்பிணி அனிதாவிற்கு பிரசவம் பார்த்த போது அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து அவர் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாயையும் சேயையும் நலமுடன் அனுமதித்தனர்.ஓடும் ஆம்புலன்சில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் கார்த்தியாயினி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விஜய்ராஜ் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.