
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம், வடுகபட்டி கிராமம், புல எண்கள்.273, 274, மற்றும் 276 ஆகியவற்றில் கண்டுள்ள நிலங்களில், தேசிய நெடுஞ்சாலை எண். 744 நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் மற்றும் கிணறு உள்ளிட்ட நிலையான அமைப்புகளில் இருந்த இடையூறுகளை அப்புறப்படுத்துதல் தொடர்பாக, இன்று மதுரை தேசிய நெடுஞ்சாலை எண். 744 திட்ட இயக்குனர், கீர்த்தி பரத்வாஜ் தலைமையில், வத்திராயிருப்பு வருவாய் வட்டாட்சியர், சரஸ்வதி மற்றும் ஶ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலைகள் (திட்டங்கள்) (நில எடுப்பு) தனி வட்டாட்சியர், எம். ரங்கசாமி ஆகியோர் முன்னிலையில், குறிப்பிட்ட கையகப் படுத்தப்பட்டுள்ள நிலங்கள் மற்றும் கிணறு உள்ளிட்ட நிலையான அமைப்புகளில் இருந்த இடையூறுகளை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு
இடையூறுகள் அப்புறப்படுத்தப்பட்டன. நத்தம்பட்டி குறுவட்ட வருவாய் ஆய்வாளர், பாலமுருகன், வத்திராயிருப்பு தனி வருவாய் ஆய்வாளர் (நில எடுப்பு), அனந்தம்மாள் மற்றும் வத்திராயிருப்பு தனி சார் ஆய்வாளர் (நில அளவை), குமார் ஆகியோர் உடனிருந்தனர்.


