• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தி கிரே மேன் ட்ரெய்லர்… கடுப்பான தனுஷ் ரசிகர்கள்…

Byகாயத்ரி

May 25, 2022

2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாக தமிழ் திரையுலகை ஹீரோவாக அறிமுகமானவர் தனுஷ். முதல் படத்தில் தனுஷை நாயகனாக ஏற்றுக் கொள்ளத் தயங்கிய சில ரசிகர்கள் தற்போது அவரை கொண்டாடி வருகின்றார்கள். தன் இரண்டாவது படமான காதல் கொண்டேன் படத்தின் மூலமாக ஒட்டுமொத்தமான விமர்சனங்களையும் பாராட்டுகளாக மாற்றியிருக்கிறார் தனுஷ். அதன்பிறகு கமர்சியல் படங்கள் ஒரு பக்கம், கிளாசிக் படங்கள் மற்றொரு பக்கம் என வெற்றிகளை குவித்து வந்தார்.

பொல்லாதவன், புதுப்பேட்டை, ஆடுகளம் போன்ற கிளாஸான படங்களிலும், திருவிளையாடல் ஆரம்பம், யாரடிநீமோகினி, வேலையில்லா பட்டதாரி போன்ற கமர்ஷியல் படங்களிலும் நடித்து அசத்தி இருக்கிறார். அதனைத் தொடர்ந்து 2018 ஆம் வருடம் FAKHIR படத்தின் மூலமாக ஹாலிவுட் நடிகராக உருவெடுத்தார் தனுஷ். இந்த நிலையில் தற்போது உலகம் அறிந்த நடிகராக வலம் வரும் தனுஷ் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து இருக்கின்றார். சமீபத்தில் இந்த படத்தில் தனுஷின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. தனுஷ் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ட்ரெய்லர் அவர்களை மிகவும் ஏமாற்றமடைய செய்திருக்கிறது. ஏனென்றால் இந்த ட்ரைலரில் தனுஷ் ஒரு சில நொடிகளே வருவதாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக தனுஷின் ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர். இந்திய சினிமா திரையுலகின் மிக முக்கியமான நடிகராக திகழும் தனுஷை ஒரு சில வினாடிகளில் ட்ரெய்லரில் காட்டியதுதான் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.