• Thu. Apr 25th, 2024

ஸ்பெயின் வாசிகளின் திராட்சை நம்பிக்கை

Byகாயத்ரி

Jan 4, 2022

புத்தாண்டு பிறக்க 12 விநாடிகள் இருக்கும்போது ஒவ்வொரு விநாடிக்கும் ஒரு திராட்சை என 12 திராட்சைகளை வேக வேகமாகச் சாப்பிட வேண்டும்.

ஒமிக்ரான் கொரோனா வகை பரவி வந்தாலும் ஸ்பெயினில் இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் பாரம்பரிய திராட்டை சாப்பிடும் வைபவம் நடந்தேறியிருக்கிறது.ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் புத்தாண்டு கொண்டாட்டமே 12 திராட்சைகளை மையப்படுத்திதான் உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. ஸ்பெயின் நாட்டில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவில் 12 திராட்சைகளைச் சாப்பிடும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. புத்தாண்டு பிறக்க 12 விநாடிகள் இருக்கும்போது ஒவ்வொரு விநாடிக்கும் ஒரு திராட்சை என 12 திராட்சைகளை வேக வேகமாகச் சாப்பிட வேண்டும். அப்படி12 விநாடிகளுக்குள் 12 திராட்சைகளையும் சாப்பிட்டு விட்டால், அடுத்த 12 மாதங்களும் சிறப்பாக இருக்கும் என்பது ஸ்பெயின்வாசிகளின் நம்பிக்கை.

ஆனால், கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைக்கட்டவில்லை. இந்த ஆண்டு ஸ்பெயினில் பாரம்பரிய திராட்சை சாப்பிடும் வைபவத்தை நடத்த ஏராளமானோர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஓமைக்ரான் தொற்றும் இப்போது வேகம் பிடித்துள்ளதால், திராட்சை பாரம்பரிய நிகழ்ச்சி நடக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒமிக்ரான் பாதிப்பையும் தாண்டி ஸ்பெயினில் புத்தாண்டுக் கொண்டாட்டமும் 12 திராட்சைகள் உண்ணும் நிகழ்வும் நடந்தேறியிருக்கிறது.

இந்தப் புத்தாண்டில் பலரும் திராட்சை சாப்பிடும் நிகழ்வை நடத்தியிருக்கிறார்கள். வழக்கமாக ஸ்பெயினில் ஓர் ஆண்டில் 11 மாதங்களில் விற்பனையாகும் திராட்சை பழங்களை விட, டிசம்பர் மாத இறுதியில் விற்பனைஆகும் திராட்சை அதிகம் ஆகும். இந்த ஆண்டு திராட்சைப் பழ விற்பனை களை கட்டியதிலிருந்து அந்தப் பாரம்பரிய நிகழ்வு கொண்டாடப்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *