நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற விஜய் தலைமையிலான த.வெ.க அரசில் மின் இணைப்புக்காக காத்திருக்கும் 2 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை எந்த அறிவிப்பும் அரசு வெளியிடாமல் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது.

வேளாண் மின் இணைப்புக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் இரன்டு லட்சத்து ,23,000 விவசாயிகளுக்கு இந்த த.வெ.க அரசின் வருகிற பட்ஜெட்டில் விடிவு காலம் பிறக்குமா? காத்திருப்போர் அனைவருக்கும் வேளாண் மின் இணைப்புகள் உடனே கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் எகிறிக்கொண்டே போகிறது.
தட்கல் திட்டத்தில் 6 மாத காலத்திற்குள் மின் இணைப்பு வழங்கும் என்ற அறிவிப்பை நம்பி, மின் இணைப்பு பெற ,திரும்பப் பெற முடியாத முன் வைப்புத் தொகையாக 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை செலுத்தி, கடந்த காலங்களிலே காத்திருப்போரின் எண்ணிக்கை 30,000க்கு மேல் உள்ளது.
சராசரியாக தலா 3 லட்சம் என வைத்துக்கொண்டாலும் கூட, சுமார் 900 கோடிக்கு மேல் விவசாயிகளின் பணம் அரசிடம் இன்றைக்கு வைப்பு வைக்கப்பட்டுள்ளது. மின்சாரத் துறையில் 36,000 கோடி ஊழல் கடந்த ஆட்சியில் நடந்திருப்பதாக வெள்ளை அறிக்கை வெளியிட்டவர்கள், இந்த 900 கோடி குறித்து மின் இணைப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஏன் என விவசாயிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.
த.வெ.க அரசு தாக்கல் செய்யும் இந்த வேளாண் பட்ஜெட்டில் மின் இணைப்பு தொடர்பான அறிவிப்பு வெளிவருமா? ஏற்கனவே தொடர் மின்வெட்டு, மின்வாரிய தலைமையகத்திலே ஹார்ட் டிஸ்க் திருட்டு என கடந்த 3 மாதங்களிலே மின்சாரத் துறையில் பல சர்ச்சைகள் எழுந்திருக்கிறது.

குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன் மாத இந்த மின்கட்டணத்துடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 40% முதல் 60% வரை மின்கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக தற்போது தமிழகம் தழுவிய போராட்டம் நடக்கிறது. 200 யூனிட் இலவச மின்சாரம் என்பதும் இன்னும் முழுமையாக மக்களுக்கு பயனளிக்கக்கூடிய திட்டமாக செயல்படுத்தப்படவில்லை.
இதற்கு இடையிலே கர்நாடகாவுக்கு தமிழக முதல்வர் விஜய் வரவேண்டாம் என கர்நாடகா முதல்வர் இன்றைக்கு கோரிக்கையாக, வேண்டுகோளாக வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. காவேரி தொடர்பான பேச்சுக்கு இன்றைக்கு முட்டுக்கட்டை விழுந்ததாக விவசாயிகள் வேதனைப்படுகிறார்கள். தண்ணீரின்றி கண்ணீரிலே தவிக்கிறது டெல்டா மாவட்டம். இதை எப்படி கையாள வேண்டும் என்கிற அணுகுமுறையை முதல்வர் விஜய் முறையாக இதை கையாளவில்லையோ என்கிற வருத்தமும் கவலையும் ஏற்பட்டிருக்கிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ஆணயத்துக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. ஆணையம் செயல்படுவதற்கு பாரத பிரதமரிடம் முறையிடலாம் என்று எடப்பாடியார் உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களும், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் என்று சொன்னபோதும் கூட, அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் இருப்பது தான்தோன்றித்தனமாக என்று சொல்லலாமா?
தமிழக விவசாயிகளின் கருத்துக்களையும் ,விவசாய சங்கங்களுடைய கருத்துக்களையும் கேட்காமல் போனது இப்போது என்ன ஆனது? முறையான பாதையில் சென்றால் தான் ஊர் போய் சேர முடியும் என்பதைப் போல, இன்றைக்கு ஜூன், ஜூலை மாதத்துக்கான தண்ணீரை நாம் பெற முடியவில்லை. ஆணையம் உத்தரவிட்டு நீர் ஒழுங்காற்று குழு கொடுத்த தீர்ப்பை வலியுறுத்தி, 3500 டி.எம்.சி.கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று சொன்னதற்கு பிறகும் கூட, கர்நாடகா நாங்கள் மேல்முறையீடுக்கு செல்வோம் என்று சொல்லுகிறார்கள்.
இந்த சூழ்நிலையிலே இந்த இரு மாநில உறவுகளுக்கான பிரச்சனை, தண்ணீரை பகிர்ந்து கொள்ளுகிற பிரச்சனை, காலம் காலமாக இருக்கிற இந்த பிரச்சனைக்கு ஒரு அறிவு சார்ந்த அணுகுமுறையை, சட்ட ரீதியான அணுகுமுறையை விட்டுவிட்டு, ஒரு அரைவேக்காட்டுத்தனமான அணுகுமுறையை கையிலே எடுத்த தமிழக அரசு இப்போது முட்டி குனிந்திருக்கிறதோ என்றுதான் நமக்கு கவலை ஏற்பட்டிருக்கிறது.
இதே போன்று அணுகுமுறைகளை அவர்கள் கையாண்டால், தமிழகத்தினுடைய தன்மானம் காற்றிலே பறக்கும்? என்ற சூழ்நிலைதான் வந்திருக்கிறது முதல்வர் விஜய் அவர்களே, இன்றைக்கு உங்களுக்கு வழிகாட்டுபவர்கள் சரியான வழிகாட்டுதலை இன்றைக்கு கொடுப்பார்கள் என்ற நம்பித்தான் இந்த மக்கள் உங்களை முதலமைச்சர் அரியணையில் அமர்த்தி இருக்கிறார்கள்.

ஆகவே, முதலமைச்சர் அரியணையில் அமர்ந்து விட்டோம் என்பதற்காக யார் பேச்சையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்பது ஜனநாயகம் ஆகாது. அது சர்வாதிகாரத்தின் தொடக்கம். ஆகவே, இந்த காவேரி நீர் பெறுவதில் விஜய்யின் சர்வாதிகாரம் இன்றைக்கு வெளிப்பட்டிருக்கிறதா? ஜனநாயகம் வெளிப்பட்டிருக்கிறதா? என்பதை மக்கள் தீர்ப்புக்கே விட்டு விடுகிறேன்.




