• Fri. Jul 31st, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

வீட்டிற்குள் புகுந்து நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடியவர் கைது..,

ByS.Ariyanayagam

Jul 31, 2026

திண்டுக்கல் அருகே வீட்டுக்குள் புகுந்து நகை பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகே கேதையெறும்பை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது வீட்டில் மர்ம நபர் உள்ளே புகுந்து 32 1/2 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றார்.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டியன்,சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.விசாரணையில் கதிரியன் குளத்தைச் சேர்ந்த ராஜசேகர் (வயது 31) என்பவர் பாலகிருஷ்ணன் வீட்டில் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடியது தெரிய வந்தது.

இதையடுத்து ஏற்கனவே திருட்டு வழக்கில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ராஜசேகரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி திருடுபோன 32 1/2 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.