• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்றைக்கு ரசாயன பிள்ளையார் வந்துவிட்டது..,

ByP.Thangapandi

Sep 15, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த சேகரன் என்ற நபர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கண்ணீர் மல்க அழுது கொண்டு சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வீடியோ வைரலாகி வருகிறது.

அதில் வினை தீர்க்கும் விநாயகா கணேச பெருமானே தமிழ்நாட்டில் உன் நிலைமையை பார்த்தியா நாங்க சின்ன வயதில் தோட்டத்தில் களிமண் எடுத்து வந்து அதை விநாயகர் சிலையாக செய்து மக்களுக்கு சுண்டல், பொறிகடலை உள்ளிட்டவைகளை கொடுத்து வழிபாடு செய்து ஆற்றுக்கு சென்று கரைப்போம்.,

அப்பொழுது எங்களுடன் வந்து விடுவியா என்ற ஏக்கத்துடன் பிரிய மனமின்றி சிலையை கரைத்து விட்டு வருவோம்.,

இன்றைக்கு ரசாயன பிள்ளையார் வந்துவிட்டது என்றும் அதை ஆற்றில் அல்லது குளத்தில் போட்டால் என்ன ஆகும் எனவும் மண்புழுக்கள் செத்துவிடும் மண்வளம் கெட்டுவிடும் ஒன்று இரண்டு மீன் குஞ்சுகள் கூட செத்துவிடும் என்றும்

யாரும் தட்டி கேட்பதில்லை என்பதற்காக நீங்கள் செய்வது அனைத்தும் சரி என்றும் ஆகி விடாது என்றும் அழுது கொண்டு வினை தீர்க்கும் விநாயகர் என்றும் வயிறு கும்பி அழுது கொண்டு சொல்கிறேன் தமிழ்நாட்டில் நீங்கள் செய்வது தவறு என்றும்.,

விநாயகருக்கு கட்சி துண்டை போடுகிறீர்கள், சூ போடுறீங்க உங்களுக்கு யார்யா அதிகாரம் கொடுத்தது என்றும் விநாயகரை விநாயகனாக கும்பிடுங்கள் என்று அழுது கொண்டு மண் வளத்தை காக்க வேண்டும் என சமூக அக்கறையுடன் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார்.,

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.,