பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பிம்பலூர் ஊராட்சிக்குட்பட்ட மரவனத்தம் கிராமத்தில், அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படும் பொதுமக்கள்.

வேப்பந்தட்டை அடுத்த மரவனத்தம் கிராமத்தில் ஒரு சமுதாய பிரிவினர் வசிக்கும் பகுதிகளில் சுமார் 300 குடும்பம் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் குடிநீர், சுகாதாரம், கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர்.
இந்த பகுதியில் சுமார் ஓர் ஆண்டுக்கு மேலாக கழிவுநீரானது வெளியே செல்ல முடியாமல், ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வாய்க்காலில் இருந்து நிரம்பி வழிந்து தெருக்களில் குளம் போல் தேங்கி விடுகிறது, அது மட்டுமல்லாமல் மழைக்காலங்களில் அந்த கழிவுநீரானது வீட்டிற்குள் புகுந்து விடுவதாகவும் இதனால் பாம்பு, விஷப்பூச்சி உள்ளிட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உயிரினங்கள் குடியிருப்புகளில் புகுந்து விடுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனால் இந்த சாக்கடை நீரானது குடிநீரோடு கலந்து விடுவதாகவும்,
இதனால் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல்வேறு நோய்த்தொற்றுக்கு ஆளாவதாகவும் இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, ஒரு கழிவுநீர் குட்டை கட்டி சாக்கடை நீரை வெளியேற்றி விடுவதாகவும் அதை கட்டினார்கள், ஆனால் அதுவும் பயனற்று கிடப்பதாகவும், கடந்த டிசம்பர் மாதம் இந்த கிராம மக்கள் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு ஆளானதால் மருத்துவக் குழு ஒன்றை நியமித்து இந்த கிராமத்தில் முகாம் நடத்தினர்.
இருப்பினும் இந்த கிராமப் பகுதிகளுக்கு அடிப்படை வசதிகளை கூட பூர்த்தி செய்து கொடுக்க முடியாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுப்பினர்.

மேலும் இந்த மாவட்டத்திற்கு தற்போது புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் பொறுப்பேற்று இருக்கிறார் எனவும் எங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஏற்பாடு செய்து தருவார் எனவும் கிராம பொதுமக்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கப்படுகிறார்கள்.