• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

குரு தக்ஷ்ணாமூர்த்தியும் தர்பை புல்லின் மகிமையும்

Byமதன்

Dec 30, 2021

குரு தக்ஷ்ணாமூர்த்தி கையில் காணப்படுவது தர்பை புல்..!தர்ப்பை புல் மகிமை வாய்ந்தது..!

திருமண விஷேசம், யாகம்,சுப நிகழ்ச்சிகள், கோயில் கும்பாபிஷேகம், மற்றும் இறப்பு சடங்குகள் ஆகியவை நடக்கும் போது ஏன் தர்ப்பை புல் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து கொள்வோம். தர்பைப்புல் வீட்டில் இருந்தால் தீய சக்திகள் அண்டாது.

தர்பை எல்லா இடங்களிலிலும் வளராது. மிகவும் தூய்மையான இடங்களில்தான் வளரும். தர்பை கதிர்வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும். எனவே கிரஹன காலங்களில் உணவு பொருட்களில் கதிர்வீச்சின்றி காக்க, தர்பையை பயன்படுத்துகிறோம்.

தர்ப்பைப்புல் இருக்கும் இடத்தில் துர்சக்திகளின் நடமாட்டம் இருக்காது. தர்பையில் ஆன்மீக, மருத்துவ குணங்கள் பல உள்ளன. தர்ப்பை புல், இறைவனுக்கும், ஜீவனுக்கும் தொடர்புடைய பாலமாக கருதப்படுகிறது.தர்ப்பை புல்லின் அடிப்பாகம் பிரம்மனும், மத்தியில் விஷ்ணுவும், நுனியில் ருத்ரனும் இருப்பதாக ஐதீகம்.

தர்பை சுபத்தை, புனிதத்தன்மையை தருவது, எல்லா பாவங்களையும் போக்க வல்லது.இந்த புல்லில் அதிகமான தாமிர சத்து உள்ளது. நமது உடலில், வெளியிலிருந்து உள்ளே புகும் தீமையைத் தடுக்கிறது.தர்பைக்கு அக்னிகற்பம் என்பது பெயர். இந்த புல், தண்ணீர் இல்லாவிட்டால் வாடாது. நீருக்குள் பலநாட்கள் இருந்தாலும் அழுகாது. ‘அம்ருத வீரியம்’ என்பது இதன் பெயர்.ஹோம குண்டங்களில், யாக சாலையில் இருந்து பிம்பத்திற்கும், கலசங்களுகும் மந்திர ஒலிககளை கடத்தி சக்தியை அளிக்கும்.

நான்கு பக்கமும் தர்பை புல்லை வைப்பது, அந்த குண்டங்களை பாதுகாக்கும் அரணாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.இறைவழிபாடு, ஜபம், ஹோமம், தியானம், பித்ரு தர்ப்பணம், பிராணயாமம் முதலிய காரியங்களில், கையில் பவித்ரம் அணிந்து கொள்ளாமல் செய்வது பலனை தராது.
விஷேஷ காரியங்கள் நடத்தும் போது வலது கை மோதிர விரலில் பவித்திரம் என தர்பை புல்லை அணிவிப்பார்கள் மோதிர விரல் மூளையுடன் சம்பந்தப்பட்டது .ஆகவே தர்பை பவித்ரம் போடும் பொது, பிரபஞ்ச சக்தி, விரல் மூலம் மூளைக்கு செல்கிறது.!

உடலிலும் பரவும். கிரகண காலத்தில், அமாவாசையிலும் தர்பைக்கு வீரியம் அதிகமாகும், ஆகவே தான் கிரகண காலத்தில், உணவு பண்டங்களில் கிரகண சக்தி தாக்காமல் இருக்க தர்பையை போடுவது வழக்கம்.தர்பை, உஷ்ண வீரியமும் அதிக வேகமும் உடையது. பஞ்சலேங்களில், தாமிரத்துக்கு, மின்சாரத்தை கடத்தும் சக்தி உண்டு, அதே சக்தி, தர்பைக்கும் உண்டு.

எல்லா ஆசனங்களை காட்டிலுமும், தர்பாசனத்தில் அமர்ந்து பூஜை செய்வது மிகவும் உயர்ந்த பலனை தரும். இதன் ஒரு சில துண்டுகளை குடிநீர்ப் பானையில் போட்டுவைத்து, அந்த நீரை அருந்தினால் கடும் வெயிலின் தாக்கம் குறையும். சூரிய, சந்திர கிரகணத்தின்போது உணவுப் பொருள்களிலும், குடிநீரிலும் சிறிது தர்பைப் புல்லைப் போட்டு வைத்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

மேலும், தர்பைப் புல்களின் காற்றுபட்ட இடங்களில் தொற்றுநோய் ஏற்படாமலிருக்கும் என்பதால், இதை கிராமத்து வீட்டு வாசல்களில் கொத்தாகக் கட்டி தொங்கவிட்டிருப்பார்கள். இந்தப் புல் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்டது. குடிநீரில் தர்பைப் புல்லை துண்டாக்கிப் போட்டு குடித்தால் சர்க்கரைநோய் கட்டுக்குள் இருக்கும்.

உடல் சூடு காரணமாக அடர் மஞ்சள் நிறத்தோடும், எரிச்சலோடும் சிறுநீர் கழிப்பவர்கள் கையளவு தர்பைப் புல்லை எடுத்து சுடுநீரில் காய்ச்சி ஆறவைத்து, வடிகட்டிக் குடித்தால் அந்த உபாதைகள் நீங்கும்.சிறுநீரகம், கல்லீரல், குடல்புண், வாய்ப்புண் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் தர்பைப் புல் கொண்டு காய்ச்சிய நீரைக் குடித்தால் அந்தப் பிரச்னைகள் நீங்கும். அதோடு, சிறுநீரகக் கற்களையும் வெளியேற்றும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

ஆண்டு முழுவதும் வைத்துப் பயன்படுத்தும் ஊறுகாய், வற்றல், வடகம் போன்றவற்றில் சில தர்பைப் புற்களைப் போட்டுவைத்தால் அவை கெட்டுப்போகாமல் இருக்கும். அவற்றின் சுவையையும் மணத்தையும் அதிகரிக்கும்.தர்பைப் புல்லால் செய்யப்படும் பாய் விரிப்பில் படுத்து உறங்கினால் உடல்சூடு தணியும்; மன உளைச்சல் நீங்கும். நல்ல உறக்கம் கிடைக்கும்; ஆரோக்கியம் நீடிக்கும். தக்ஷ்ணாமூர்த்தி கைகளுடன் ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்திருப்பார்.அவருடைய வலது கால் ‘அபஸ்மரா’ என்ற அரக்கனை மிதித்த நிலையில் இருக்கும். அது அறியாமையை குறிக்கின்றது. அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும் பாம்பையும் பிடித்திருப்பார். அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பும் கீழ் இடது கையில் தர்பைப் புல்லையும் ஓலைச்சுவடியையும் வைத்து இருப்பார். அவரது கீழ் வலது கை மூலம் ஞான முத்திரையை காட்டுவார். அந்த தக்ஷ்ணாமூர்த்தி யார் தெரியுமா..? சிவபெருமான்… ஆமாம் அவர் சிவபெருமானின் ஒரு ரூபம் ஆவார்.அப்படிப்பட்டவர் கையில் வைத்துள்ள தர்பையை வெறும் புல்லாகவா நினைக்க வேண்டாம்.!

தெய்வத்தன்மையும் தன்னுள்ளே கொண்டுள்ளதாக தர்பையானது கருதப்படுகிறது.

ஓம் சிவாய நமஹ..!இந்த நாள் குருவருளுடன் இனிதாக அமைய வாழ்த்துக்கள்..!ஓம் குருவே போற்றி..!