• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

இரும்பு கடையில் பதுங்கிருந்த கண்ணாடி விரியன்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே செக்போஸ்ட் பகுதியில் தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பழைய இரும்பு கடை வைத்திருப்பவர் பாண்டி இந்நிலையில் இவருடைய இரும்பு கடையில் இன்று சுமார் 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு பழைய இரும்பு பொருட்கள் அடங்கிய மூட்டைகள் அடங்கிய பகுதி ஒன்றில் பதுங்கி இருப்பதைப் பார்த்து ஊழியர்கள் உடனடியாக ஆண்டிபட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் .

இந்த தகவல் அறிந்த ஆண்டிபட்டி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நிலைய அலுவலர் கணேசன் அவர்கள் தலைமையில் தீயணைப்பு துறை மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பழைய இரும்பு பைகள் அடங்கிய பகுதியில் பதுங்கியிருந்த கண்ணாடி விரியன் பாம்புகளை லாபமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.