• Fri. Jan 16th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சினிமாவின் எதிர்காலம்! வரவேற்க வேண்டிய கருத்தரங்கம்!

சினிமா செய்திகள் என்றால், எந்த படத்தில் ஹீரோ யார், ஹீரோயின் யார் என்பது போன்ற கிசுகிசுக்கள் மட்டுமல்ல…

உலக சினிமா அரங்கம் இன்று தமிழ் சினிமாவை தொடர்ந்து திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய தமிழ் படங்கள் பல உலக மேடைகளில் திரையிடப்பட்டு வருகின்றன. லேட்டஸ்டாக மாரி செல்வராஜின் பைசன் காளமாடன் படம் கூட சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டது.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை அலசி, ஆராய்ந்து, ஆலோசனைகளை வழங்கும் “ஃபிலிம் இன்டஸ்ட்ரி 5.0: தி ஃபியூச்சர் ஆஃப் இந்தியன் சினிமா” கருத்தரங்கம் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

படைப்பாற்றல் மற்றும் வர்த்தகத்தை தொழில்நுட்பத்துடன் கலந்து புதிய உயரங்களை எட்டுவது குறித்து வல்லுநர்கள் விளக்கம‌ளித்தனர்.

ஃபிப்செயின், ரிவர் வென்ச்சர்ஸ், பியூர் சினிமா, பிராண்ட் சேஞ்ச், ஐபி கிளைம்ப், புரொடியூசர் பஜார் ஆகிய நிறுவனங்கள் இணைந்து “ஃபிலிம் இன்டஸ்ட்ரி 5.0: தி ஃபியூச்சர் ஆஃப் இந்தியன் சினிமா” எனும் கருத்தரங்கை சென்னையில் ஜனவரி முதல் வாரத்தில் நடத்தினார்கள். கிண்டி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள புரொடியூசர் பஜார் அலுவலகத்தில் இது நடைபெற்றது.

தொழில்நுட்பம் படைப்பாற்றலுக்கு எவ்வாறு உதவும் என்பது குறித்து சிங்கப்பூரை சேர்ந்த ரிவர் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் டாக்டர். விவேகா காளிதாசன் உரையாற்றினார்.

கதை எழுதுதல், படத்தொகுப்பு, மற்றும் காட்சி கதைசொல்லல் ஆகியவற்றில் செயற்கை தொழில்நுட்பம் பெரும் மாற்றத்தை உண்டாக்கும் என்ற தலைப்பில் கலந்துரையாடலும், செயற்கை தொழில்நுட்பம் சார்ந்த திரைத்துறை பொருளாதார சூழலில் உரிமைகள், வருமானம் மற்றூம் உலகளாவிய தாக்கத்தை எவ்வாறு மறு உருவாக்கம் செய்யலாம் என்பது குறித்த வட்டமேசை கலந்துரையாடலும் நடைபெற்றது.

கருத்தாழம் மிக்க சிந்தனைகள் மற்றும் உரைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரைத்துறையினர் இடையே தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தி வர்த்தக எல்லைகளை விரிவுபடுத்துதல், படைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் உரிமைகளை பாதுகாத்தல் குறித்த புரிதல் மற்றூம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக இதில் பங்கேற்றவர்கள் ஏற்பாட்டாளர்களான ஃபிப்செயின், ரிவர் வென்ச்சர்ஸ், பியூர் சினிமா, பிராண்ட் சேஞ்ச், ஐபி கிளைம்ப், புரொடியூசர் பஜார் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறவேண்டும். சினிமாவை பற்றிய சிந்தனைகள் பரவலாக வேண்டும்.

இந்தமான் உந்தன் சொந்தமான்… பக்கம் வந்துதான்…

தமிழ் சினிமாவில் அழிக்க முடியாத சரித்திரமாக நிலைத்து நிற்கும் கரகாட்டக் காரன் படத்தின் நாயகன் ராமராஜனை, அப்படத்தின் நாயகி கனகா ஜனவரி 14 ஆம் தேதி அவரது வீடு தேடிச் சென்று சந்தித்தார்.

இந்த மான் உந்தன் சொந்தமான், பக்கம் வந்துதான் சிந்து பாடும் என்று கரகாட்டக் காரனில் குழைவான அன்பை வெளிப்படுத்திய இந்த ஜோடியின் சந்திப்பு செய்தியாகவும் பரபரக்க வைத்துள்ளது.

இதுகுறித்து ராமராஜன் கூறுகையில், “கனகாவைப் பார்க்க வேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். அவரை தொடர்பு கொண்டு உங்களைச் சந்திக்க வேண்டும் என கேட்டேன். நானே வருகிறேன் என கூறி, என் வீட்டுக்கு வந்துவிட்டார்.

பிறகு பழைய விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். அவருடன் நான் நடித்த கரகாட்டக்காரன், தங்கமான ராசா படங்கள் வெற்றி பெற்றன. அவர், தான் குண்டாகிவிட்டதாகச் சொல்லி வருத்தப்பட்டார்.

அது ஒன்றுமில்லை, மனசுதான் முக்கியம்’ என்று சொன்னேன். என் வீட்டில் இருவரும் மதிய உணவு சாப்பிட்டோம். பழைய விஷயங்களை அவரிடம் பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சியாக இருந்தது” என்றார் ராமராஜன்.

இந்த இருவரும் சந்தித்துக் கொண்டது கரகாட்டக்காரன் ரசிகர்களுக்கும் பெரிய மகிழ்ச்சிதான்.

எனக்கு 48கட்… சென்சாரை சாடிய ஜீவா..

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை வெளியிட மத்திய அரசின் சென்சார் போர்டு சான்று கொடுக்க மறுத்துவரும் நிலையில், இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் சில நடிகர்கள்தான் விஜய்க்கு இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர்.

நடிகர் ஜீவா நடித்துள்ள , தலைவர் தம்பி தலைமையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் விஜய் பேசினார்.

அப்போது அவர், ““விஜய்யின் ‘ஜனநாயகன்’ வெளியாகாதது குறித்து வருத்தம் இருக்கிறது. அப்படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம். நான் நடித்த ‘ஜிப்ஸி’ படத்துக்கு சென்சார் 48 கட் கொடுத்தது. அந்தப் பிரச்சினையை முடித்துக்கொண்டு படத்தை வெளியிட்டால், கொரோனா எங்களை காலி செய்து விட்டது” என்றார் வலியோடு!