மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மாநகராட்சி முதியோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது.
சிம்மக்கல் பகுதியில் செயல்படும் மாநகராட்சி முதியோர் இல்லத்தில் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் தனது சொந்த செலவில் உணவு ஏற்பாடு செய்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் மேலூர் அரசு மாற்றுத் திறனாளிகள் பள்ளி பயிற்சியாளர் டேனியல், மேலூர் மீனாட்சி அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர் முத்து மாயாண்டி, சமூக ஆர்வலர்கள் இல.அமுதன், ரமேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதியோர் இல்ல பொறுப்பாளர் கிரேசியஸ் நன்றி தெரிவித்தார்.