• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

முன்னாள் போப்பாண்டவர் காலமானார்

ByA.Tamilselvan

Dec 31, 2022

முன்னாள் பேப்பாண்டவராக இருந்த 16ம் பெனடிக் உடல் நலகுறைவு காரணமாக காலமானார்.
உலக கத்தோலிக்கர்களின் தலைவராக இருப்பவர் போப் பிரான்சிஸ். இவருக்கு முன்பு போப்பாண்டவராக 16-ம் பெனடிக்ட் இருந்து வந்தார்.உடல் நலக்குறைவு காரணமாக அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். . 95 வயதாகும் அவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக வாடிகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஓய்வுபெற்ற போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட்டின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில், போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். இதுகுறித்து வாடிகன் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புரூனி வெளியிட்டுள்ள அறிக்கையில், “போப்பாண்டவர் 16ம் பெனடிக் இன்று காலை 9:34 மணிக்கு வாட்டிகனில் உள்ள மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் காலமானார் என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தது.