

தனது தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்தவரை வனத்துறையினர் கைது செய்தனர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள சேரம்பாடி புதுப்பாடி பகுதியில் வசித்து வருபவர் பாலச்சந்திரன் 48 இவர் தனது வீட்டு தோட்டத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார்,
இந்நிலையில் தனது தோட்டத்தை சுற்றி மின் வேலி அமைத்துள்ளார் மின் வேலி என்பது சோலார் மூலம் பேட்டரிகள் வைத்து அமைக்க வேண்டிய ஒன்றாகும். ஆனால் அதில் மின்சாரம் பாச்சியதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைக்கவே சேரம்பாடி வனச்சரகர் அய்யனார் தலைமையில் வனவர் ஆனந்தகுமார் மற்றும் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்,
பாலச்சந்திரன் தனது தோட்டத்திற்குள் யானை மற்றும் காட்டு விலங்குகள் வராமலும் வேட்டையாடும் நோக்கத்திலும் மின் வேலி அமைத்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாலச்சந்திரனை கைது செய்து மின்வேலிக்கு பயன்படுத்திய கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
