• Wed. Nov 6th, 2024

போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் கடும் அவதி

ByKalamegam Viswanathan

Jul 22, 2023

மதுரை மாவட்டம் சோழவந்தானில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் சோழவந்தான் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட மக்களும் வசிக்கும் நிலையில் அனைவரும் தங்களின் அன்றாட தேவைகளுக்காக சோழவந்தான் நகருக்குள் வந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் சோழவந்தானில் உள்ள மாரியம்மன் கோவில் சாலை மற்றும் பெரிய கடை வீதி சின்னக்கடை வீதி வட்ட பிள்ளையார் கோவில் ஆகிய பகுதிகளில் தினசரி ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் குறிப்பாக சோழவந்தான் ரயில்வே மேம்பால பணிகள் கட்டும் பணி பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்போது முடிவடைந்த நிலையில் இன்னும் திறக்கப்படாத சூழ்நிலையில் சோழவந்தான் பேருந்து நிலையமும் திறக்கப்படாததால் மதுரை திருமங்கலம் வாடிப்பட்டி உசிலம்பட்டி போன்ற பகுதிகளிலிருந்து சோழவந்தான் நகருக்கு வந்து செல்லும் பேருந்துகள் நிற்பதற்கு இடமில்லாமல் ஆங்காங்கே நினைத்த இடத்தில் நின்று செல்லும் சூழ்நிலையும் உள்ளது இதனால் பொதுமக்கள் ஒவ்வொரு பகுதிக்கும் செல்வதற்கு பேருந்துகளை தேடி செல்லும் அவல நிலையும் உள்ளது இந்த நிலையில் திருவிழா காலம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் போன்ற நாட்களில் சோழவந்தான் மாரியம்மன் கோவில் பகுதியானது கடும் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக தினசரி சுமார் 50க்கும் மேற்பட்ட முறை ஒவ்வொரு முறையும் அரை மணி நேரத்திற்கு மேல் பேருந்துகள் சோழவந்தனை விட்டு வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் அலுவலகம் மற்றும் பள்ளி கல்லூரிக்கு செல்பவர்கள் மற்றும் தனியார் வேலைகளுக்கும் செல்வோம் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர் குறிப்பாக கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம் மன்னாடிமங்கலம் குருவித்துறை முள்ளி பள்ளம் தென்கரை போன்ற சோழவந்தானின் புறநகர் பகுதிகளில் இருந்து மதுரை திருமங்கலம் உசிலம்பட்டி போன்ற பகுதிகளுக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் ஆகையால் இதனை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் சோழவந்தானில் புறநகர் சாலை வசதி ஏற்படுத்தவும் மற்றும் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள ரயில்வே மேம்பாலம் மற்றும் சோழவந்தான் பேருந்து நிலையம் ஆகியவற்றை விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு விடவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *