தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது.இதனால் பொது மக்கள் முதியோர் பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.இதை கருத்தில் கொண்டு கல்லல் தெற்கு ஒன்றிய செயலாளரும் சிவகங்கை நாடாளுமன்ற வேட்பாளருமான சேவியர் தாஸ் ஏற்பாட்டில் கல்லல் குன்னம்மா காளி கோவில் அருகே நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்,மோர், தர்பூசணி, நுங்கு, இளநீர், சர்பத் பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன்,செந்தில்குமார், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் தூளவூர் பார்த்திபன்,ஒன்றிய பாசறை செயலாளர் தீபக், மாவட்ட பிரதிநிதி கண்ணன், ஒன்றிய துணை செயலாளர் பாலு,மாவட்ட சிறுபான்மை தலைவர் அமல்ராஜ், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் நாகராஜ், கிளைச் செயலாளர்கள் சுரேஷ், செல்லப்பாண்டி,மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.