வீட்டில் ஜன்னல் மாடியில் கதம்ப விஷ வண்டு கூடு தீ வைத்து அழித்த தீயணைப்பு துறையினர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள திருநகர் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சின்னகருப்பன் இவரது வீட்டில் மாடியில் ஜன்னல் அருகில் கதம்ப விஷ வண்டு கூடு கட்டியிருந்தது. இதனைத்தொடர்ந்து சின்னகருப்பன் திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக தீயினை கொண்டு கதம்ப வண்டுகளை அழித்தனர்.