



மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகர் அருள்மிகு ஸ்ரீ பச்சை காளியம்மன் முனியாண்டி கோவில் உற்சவ விழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரீ பச்சை வள்ளி அம்மனுக்கு பொங்கல் வைத்து அக்னிசட்டி பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

தொடர்ந்து பால் தயிர் நெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். மாலை பசும்பொன் நகர் பகுதியில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள், பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை பசும்பொன் நகர் கிராமத்தார்கள் மற்றும் ஆன்மீக நண்பர்கள் செய்திருந்தனர்.


