


காண்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ காளியம்மன் மற்றும் முனியாண்டி கோவில் உற்சவ விழா நடைபெற்றது.
மதுரை கான்பாளையம் 4வது தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் மற்றும் ஸ்ரீ முனியாண்டி கோவில் 61வது ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு உலக நன்மை வேண்டிய மழை பெய்ய வேண்டியும் விவசாயம் செழிக்கவும் கல்வி மேம்படவும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

முன்னாள் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் 48 வது வார்டு கவுன்சிலர் ரூபினி குமார் தலைமையில் நடைபெற்ற ஸ்ரீ ஆண்டாள் குழுவினரின் திருவிளக்கு பூஜையில் சேர்ந்த பெண்கள் பலர் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் தீபாரதனைகளும் நடைபெற்றன. இந்நிகழ்வில் நிர்வாகி சுப்பிரமணி,அதிமுக அதற்கு இரண்டாம் பகுதி கழக செயலாளர் கலைச் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்

