


மதுரை நேதாஜி ரோடு பகுதியில் உள்ள ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் திருக்கோவில் நூறாம் ஆண்டு சிறப்பு பால்குட உற்சவ திருவிழா கடந்த மார்ச் 28ஆம் தேதி துவங்கியது.
பங்குனி உற்சவ விழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் தீப ஆராதனை மற்றும் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான உமா மகேஸ்வரி குழுவின் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.இந்நிகழ்வில் தலைவர் துரைராஜ் துணைத் தலைவர்கள் சித்தநாதன் அசோக் செயலாளர் ஜெயக்குமார், சுந்தர்ராஜ் பூசாரிகள் வேலுச்சாமி சரவணன் பொருளாளர் ரவிக்குமார் சட்ட ஆலோசகர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மதுரை முனிச்சாலை ரோடு இஸ்மாயில்புரம் 4வது தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஸ்ரீ முனீஸ்வரர் கோவில் 124 வது ஆண்டு பங்குனி உற்சவ விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.


இந்நிகழ்வில் அப்குதியை சேர்ந்த பெண்கள் பலர் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி தரிசனம் செய்தனர்

