• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

களத்திலும் தொடங்கிய கல்வி போர் : காங்கிரஸ் vs ஆம் ஆத்மி

அண்மையில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி அளித்திருந்தார்.


அதில், பஞ்சாபில் உள்ள தலித் வாக்காளர் ஒருவர் தன்னிடம் வந்து ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிப்பதாகக் கூறினார். நான் அவரிடம் தலித்களின் காப்பாளர் என கூறப்படும் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என கேட்டேன்.
அதற்கு பதிலளித்த அவர், டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளை ஆம் ஆத்மி மாற்றியமைத்துள்ளது. கல்வியால் மட்டுமே மக்களின் வாழ்க்கையை மாற்ற முடியும். வாக்காளர்கள் டெல்லியைப் போன்று பஞ்சாபிலும் அதிநவீன அரசுப் பள்ளிகளை விரும்பினால் ஆம் ஆத்மிக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார் என்றார்.

மதம் மூலம் நீண்ட காலமாக தேர்தல் அரசியல் அரங்கேறும் மாநிலத்தில், அரசியல் விவாதங்களில் ஈடுபடும் இரண்டு முக்கிய போட்டியாளர்களான ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக கல்வி உருவெடுத்துள்ளது.

இதுதொடர்பாக முறையே காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி அரசாங்கங்களின் தலைமையிலான பஞ்சாப் மற்றும் டெல்லியின் கல்வி அமைச்சர்களுக்கு இடையே ட்விட்டர் போரும் நடைபெற்றது.
கடந்தாண்டு தொடக்கத்தில், மத்திய கல்வி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட, 2019-20 ஆம் ஆண்டுக்கான செயல்திறன் தரவரிசைக் குறியீட்டில் (பிஜிஐ) பஞ்சாப் மாநிலம் முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்த விவாதம் சூடுபிடிக்க தொடங்கியது.
கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான பஞ்சாப் அரசு, தரவரிசைப் பட்டியலுக்கு பாராட்டை பெற்றுகொள்ளும் சமயத்தில், டெல்லி கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா, கேப்டன் அமரீந்தர் சிங் மீது மோடிஜி பொழிந்த ஆசீர்வாதங்களின் விளைவுதான் பஞ்சாபின் முதல் தரவரிசை.விநோதமாக, கல்வியில் பஞ்சாப் அரசின் செயல்பாடுகள் மற்றும் போதாமைகள் குறித்து மக்கள் கேள்வி எழுப்பி வரும் நேரத்தில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

டெல்லி அமைச்சரின் பேச்சுக்கு அமரீந்தர் தக்க பதிலடி கொடுத்தார். அவர், அமைச்சர் குற்றச்சாட்டு முற்றிலும் கொடூரமானது என கூறிய அவர், பஞ்சாப்க்கு வாருங்கள், எங்கள் பள்ளிகளைக் காட்டுகிறேன். டெல்லியின் கல்வி முறையை மேம்படுத்த நீங்கள் உண்மையிலேயே ஆர்வமாக இருந்தால், நீங்கள் என்னுடன் சேர்ந்துகொள்ளுங்கள். விஷயங்களை எவ்வாறு சிறப்பாக நிர்வகிப்பது என்பதை நான் உங்களுக்குக் கற்றுக்கொடுப்பேன் என்றார்.

இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பஞ்சாப் கல்வி அமைச்சர் பர்கத் சிங்குக்கும் டெல்லி கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கும் இடையே ட்விட்டர் போர் வெடித்தது. அப்போது ட்வீட் பதிவிட்ட சிசோடியா, நான் பர்கத்துடன் இணைந்து டெல்லி மற்றும் பஞ்சாப்பில் தலா 10 பள்ளிகளை பார்வையிட விரும்புகிறேன் என்றார்.

சிசோடியாவின் அழைப்பிற்கு பதிலளித்த பர்கட், 10 பள்ளிகளுக்கு பதிலாக பஞ்சாப் மற்றும் டெல்லியில் இருந்து தலா 250 பள்ளிகளை எடுத்து தேசிய PGI குறியீட்டில் ஒப்பிடுவோம். பின்னர், பள்ளியின் உள்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் பள்ளிகளின் எண்ணிக்கை குறித்து விவாதம் நடத்துவோம் என்றார்.
இதையடுத்து டெல்லியில் உள்ள 250 சிறந்த பள்ளிகளின் பட்டியலை வெளியிட்ட சிசோடியா, பஞ்சாப் பள்ளிகளின் விவரங்களை வெளியீடுமாறு பர்கத்துக்கு கோரிக்கை விடுத்தார்.
ஆனால் பர்கத், டெல்லியின் கல்வி மாதிரியை ‘போலி’ என்று கூறி, 14 கேள்விகள் அடங்கிய தொகுப்பை கெஜ்ரிவால் அரசு பதிலளிப்பதற்காக வெளியிட்டார்.

ட்விட்டரில் ஆரம்பித்த போர் அடுத்த கட்டமாக களத்தில் ஆரம்பித்தது. கடந்தாண்டு டிசம்பர் 1 ஆம் தேதி, சிசோடியா, முதல்வர் சன்னியின் தொகுதியான சம்கவுர் சாஹிப்புக்கு சென்று, அங்கிருந்த பள்ளிகளின் உண்மையான நிலையை அம்பலப்படுத்தியதாக கூறினார்.
பள்ளிகளில் போதிய ஆசிரியர்களும், குடிநீர் வசதியும் இல்லை எனவும், கழிவறைகள் சீராக செயல்படவில்லை, வகுப்பறைகள் சிலந்தி வலைகள் மற்றும் குப்பைகளால் நிரம்பியுள்ளன என குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

ஏறக்குறைய 20 நாள்களுக்கு பிறகு, ஆம் ஆத்மியால் பரப்பப்படும் பொய்களை அம்பலப்படுத்த அதே பள்ளிகளுக்கு சென்ற சன்னி, பேஸ்புக் லைவ் மூலம் பள்ளிகளின் உட்கட்டமைப்பு விவரித்து, சிசோடியா சென்ற பள்ளிகள் தான் சிறந்தவை என்பதை விளக்கினார்.
பஞ்சாபில் உள்ள காங்கிரஸ் அரசும், டெல்லியில் ஆம் ஆத்மி அரசும் ஒருவரையொருவர் மிஞ்சும் முயற்சியில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் அரசியலுக்கு இழுத்து வருவதை நிபுணர்கள் சுட்டிக்காட்டினர். கடந்த ஐந்தாண்டுகளில், எல்இடி திரைகள், புரொஜெக்டர்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆடியோ போன்ற வசதிகளுடன் குறைந்தது 13,844 அரசுப் பள்ளிகளை (மாநிலத்தில் உள்ள 19,200 அரசுப் பள்ளிகளில் கிட்டத்தட்ட 72%) ‘ஸ்மார்ட் பள்ளிகளாக’ மாற்றியுள்ளதாக மாநில அரசு கூறுகிறது.

அரசு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சுக்விந்தர் சிங் சாஹல் கூறுகையில், ‘ஆரம்ப வகுப்புகளுக்கு முந்தைய வகுப்புகளை தனியாரை போல் அரசும் தொடங்கியது, நல்ல நடவடிக்கையாகும். ஆனால், அவர்களுக்கான சிறப்பு ஆசிரியர்கள் இல்லை.ஒரே ஆசிரியர் மட்டும் இருக்கும் பள்ளிகள் இன்னமும் உள்ளன. அனைத்து பள்ளிகளிலும் பாட வாரியாக தனித்தனி ஆசிரியர்கள் இல்லை என்றார்.

வேலையில்லா BEd பட்டதாரிகள் முதல் ஒப்பந்த ஆசிரியர்கள் வரை என குறைந்தது 17 ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு பிரச்சனைகளில் அரசாங்கத்திற்கு எதிராக தற்போது போராட்டம் நடத்தி வருகின்றன.
ஏழாவது ஊதியக் குழுவை அமல்படுத்தாததைக் கண்டித்து கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர்கள் பாடம் மட்டுமே கற்பிப்பார்கள் என்று 2017 இல் காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தாலும், இன்னும் தேர்தல் பணிகளுக்காகவும் கூடுதல் பணிக்காகவும் அழைக்கப்படுவதாக ஆசிரியர்கள் புகார் கூறுகின்றனர். பெருந்தோற்று காலத்தின் போது தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் பெருமளவில் இடம்பெயர்ந்ததே பள்ளிகளை பேசும் புள்ளியாக மாற்றியது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் ஹர்ப்ரீத் துவா, மாநிலத்திலிருந்து இளைஞர்கள் பெருமளவில் இடம்பெயர்வதும் மக்களையும் அரசியல்வாதிகளையும் கல்வி பற்றி பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மாணவர்களுக்கு இங்கு வேலைவாய்ப்புகள் இல்லை. அரசு மற்றும் தனியார் துறைகள் மட்டுமின்றி, தொழில் துறையினரும் வேலைவாய்ப்பு வழங்கவில்லை. டெல்லியின் கல்வி மாதிரி நகர்ப்புறங்களுக்கானது, அதே சமயம் பஞ்சாபிற்கு நகர்ப்புற-கிராமப்புற மாதிரி தேவை என்றார்.