கோவையில் கொரியர் லாரி விபத்து : குடிபோதையில் வந்த ஓட்டுநர் குடிநீருக்கு தோண்டப்பட்ட குழிக்குள் இறக்கினார் – அதே வாகனத்தில் படுத்து உறங்கும் ஓட்டுநர் !!!
தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர், தமிழ்நாட்டின் முக்கிய ஜவுளி, தொழில்துறை, வணிகம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் உற்பத்தி மையமாகவும் தொழில்மயமான மாவட்டமாக விளங்கி வருகிறது.

வெளியூர், வெளி மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வரும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் லட்சக் கணக்கானோர் இங்கு தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் வேகமாக வளர்ந்து வரும் கோவை மாநகரின் மக்களின் தேவையான பொருள்களை உடனடியாக பெறுவதற்கு கொரியர் சர்வீஸ் பயன்பட்டு வருகிறது. இதில் நாள்தோறும் ஏராளமான கொரியர் நிறுவனங்களுக்கு நூற்றுக் கணக்கான வாகனங்கள் மூலம் பொருட்களை பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை கோவை இருகூர் தண்ணீர் டேங்க் அருகே லாரி ஒன்று சென்று உள்ளது. அப்பொழுது அந்த சாலையில் ஓரத்தில் குடிநீருக்காக தோண்டப்பட்ட குழி ஒன்று இருந்தது. அதனை குடிபோதையில் வந்த கொரியர் லாரி ஓட்டுநர் குழிக்குள் லாரியை இறக்கி விபத்துக்கு உள்ளானது. போதையில் இருந்த ஓட்டுநர் செய்வது அறியாது நிதானம் இழந்து அதே லாரியில் படுத்து அமர்ந்து கொண்டு உள்ளார். மேலும் அந்தச் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அவரை எழுப்பியது போது லாரி சீட்டில் இருந்து கீழே விழுந்தார். விழுந்த நிலையில் எழுந்து இருக்க முடியாமல், மதுபோதையில் அப்படியே படுத்து கிடக்கின்றார்.

அதிர்ஷ்டவசமாக பகுதியில் சென்ற மக்களும் மேலும் பெரும் விபத்து ஏற்படாமல் இருந்ததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.
இது குறித்த பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
மது போதையில் லாரியை ஒட்டி விபத்தை ஏற்படுத்தி மயங்கி கிடக்கும் ஓட்டுநர் செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி கோவையில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.