பாஜகவில் அண்ணாமலை புயல், நயினார் நாகேந்திரன் தென்றல், இருவருக்கும் உரிய முக்கியத்துவம் கட்சியில் கொடுக்கப்பட்டுட்டு வருகிறது.
செங்கோட்டையன் தலைவர்களை சகசமாக சந்தித்து இருக்க முடியும்,
சேகர்பாபு , செங்கோட்டையன் சந்திப்பு நடந்துள்ளது,
அப்படி என்றால் அவர் தவெக சென்றதை கண்டு திமுக தான் அஞ்சுகிறது- புதுக்கோட்டையில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினருமான பொன்.ராதாகிருஷ்ணன். பேட்டி
புதுக்கோட்டை மாவட்ட பாஜக அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினருமான பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

வாக்காளர் சிறப்பு திருத்தம் பணிகளை பாஜக நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகிறது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தப் பணி எந்தவிதமான தொய்வும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் பாஜக மிக கவனமாக இருந்து வருகின்றனர்.
பாஜகவின் சி டீம் தான் செங்கோட்டையன் மற்றும் விஜய் என்று அமைச்சர் ரகுபதி கூறி வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பொன் ராதாகிருஷ்ணன் பாஜகவின் பி டீம் தான் ரகுபதி
திமுகவில் என்ன நடக்கிறது என்பதை எங்களுக்கு தகவல் சொல்வது அமைச்சர் ரகுபதி தான்
காலம் என்னும் உள்ளது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும் ஜனவரி மாதம் இறுதியில் தெரியவரும்
திமுக கூட்டணிலும் இதே நிலைதான்
அங்குள்ளவர்கள் முழு மனதோடு கூட்டணியை ஏற்றுக்கொள்ளவில்லை
பாஜக யாரையும் ஏமாற்றக்கூடிய கட்சி அல்ல
நம்பி வந்தவர்களை ஏமாற்றக்கூடிய கட்சி பாஜக கிடையாது
நம்பி வரக்கூடியவர்கள் எந்த நோக்கத்தோடு வருகிறார்கள் என்பது தான் முக்கியம்
அதை வைத்து தான் ஏற்கப்படவேண்டுமா ஏற்கப்பட வேண்டாமா காலம் தாழ்த்தி ஏற்றுக் கொள்ளலாமா என்பது முடிவு பண்ண வேண்டும்
ஓபிஎஸ் தனது அமைப்பின் பெயரை மாற்றிக் கொண்டுள்ளார் மாற்றிக் கொண்ட பின்னர் அவர் கூறிய கருத்துக்களை கவனத்தில் கொள்ளவேண்டும்
கூட்டணி வைப்பது என்பது அவர் அவர்களுக்கு இருக்கக்கூடிய லாப நஷ்டங்களை பொறுத்துதான்
எதையும் முடித்து வைத்து விடக்கூடாது தேர்தல் அறிவிப்பு வரும் வரை எதையும் முடிக்க முடியாது
கூட்டணி எப்படி வேண்டுமானாலும் மாறலாம்
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பதை பாஜக தேசிய அளவில் முன்னெடுத்து வருகிறது
ஏற்கனவே பாஜக அறிவி பெரும்பான்மை பெற்றிருந்த போதிலும் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து அவர்களுக்கும் ஆட்சியில் பங்கு கொடுத்தது தான் பாஜக
60 வருடமாக இருக்கக்கூடிய சூழ்நிலைகள் தான் தமிழகத்தில் இது புதிதாக இருப்பதற்கான காரணம்
திமுக கூட்டணிலும் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பதை அனைவரும் கேட்கத் தொடங்கிவிட்டனர் திமுக என்ன பதில் கூற போகிறார்கள் என்பது இதுவரை தெரியவில்லை அதை பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமும் இல்லை
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதவர்கள் கூட்டணி கட்சி யுடன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்களா
அண்ணாமலை இருந்த போதும் சரி தற்போதும் சரி பாஜக வேகமாக தான் செயல்பட்டு கொண்டுள்ளது
தலைமைப் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டாலும் அண்ணாமலை வேகமாக தான் செயல்பட்டு வருகிறார் அதேபோன்று மாநில தலைவரும் வேகமாக செயல்பட்டு வருகிறார்
அண்ணாமலை புயல் என்றால் நைனார் நாகேந்திரன் தென்றல்
மக்களோடு நாங்கள் கூட்டணி அமைத்தாகிவிட்டது
திமுக தோற்கடிக்க வேண்டும் என்று வைராக்கியத்தோடு மக்கள் உள்ளனர்
யார் யாரோடு கூட்டு செய்கிறார்கள் என்பது இரண்டாவது விஷயம் தான்
மக்கள் நலனுக்காக வைக்கக்கூடிய கூட்டணி தான் தேசிய ஜனநாயக கூட்டணி அந்த கூட்டணி தான் வெற்றி பெறும்
விஜய் வாக்குகளை பிரிப்பார் என்ற கருத்து நிலவுகிறது அது குறித்து எங்களுக்கு கவலை இல்லை ஓட்டை பிரித்து விடுவார் என்று எந்த கட்சி கவலைப்படுகிறதோ அவர்கள் தான் கவலைப்பட வேண்டும்
செங்கோட்டையன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு யாரை சந்தித்தார்
அமைச்சர் சேகர்பாபுவை தான் என்று ஊடகங்கள் அனைத்தும் கூறின அது பொய்யா
ஒரு முக்கியமான தலைவர் செங்கோட்டையன் அதனால் அவர் பாஜக அமைச்சர்களை எளிதாக அவர் சந்தித்திருக்க முடியும
செங்கோட்டையன் பேசி இருந்தாலும் அதை பாஜக தலைவர்கள் உடன்பட்டு பேசினார்களா என்பதை பார்க்க வேண்டும்.
செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்திற்கு சென்றதற்காக திமுக தான் அஞ்சுகிறது இளைஞர்கள் விவரம் தெரிந்தவர்கள் அவர்கள் ஒரு முடிவு எடுத்து விட்டார்கள்.
விஜய்க்கு தான் இளைஞர்கள் வாக்கு செல்லும் என்று நீங்கள் திணித்து விடாதீர்கள்
தமிழகம் நன்றாக இருக்க வேண்டும் என்று யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்கள் பேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரவேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு
இல்லையென்றால் அவர்களுக்கு உள்நோக்கம் ஒன்று உள்ளது என்பது தான் அர்த்தம்
தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று தற்போதும் கூறுவார்கள் இன்னும் நிறைய கூறுவார்கள் ஜனவரி மாதம் வரை கூறுவார்கள்
ஜனவரி மாதத்தில் இதுவரை ஆயிரம் ரூபாய் வாங்காதவர்களுக்கெல்லாம் ஆயிரம் ரூபாய் கொடுக்கின்ற அறிவிப்பும் வரும்
ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற திட்டமும் வருவதற்கு உண்டான வாய்ப்புகள் உள்ளது
ஆண்களுக்கு 2000 ரூபாய் கொடுப்போம் என்று அறிவிப்பும் அவர்கள் கொடுப்பார்கள்
மழை புயலால் நாங்கள் பாதிக்கப்படக்கூடாது என்று நாம் விரும்புவோம் ஆனால் மழை வர வேண்டும் என்று இங்கு ஆட்சியில் இருப்பவர்கள் நினைக்கின்றனர் 4000 கோடி ரூபாய் நிதியில் சென்னையில் பல்வேறு பணிகள் நடைபெற்றதாக கூறினார்கள் ஆனால் எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூடாது நிக்காது என்று சொன்னார்கள் ஆனால் அவ்வாறு நடந்துள்ளதா
இது குறித்து சென்னை மக்களிடம் கேட்டுப் பாருங்கள்
கடல் தண்ணீரே தற்போது ஊருக்குள் வந்துவிடும் நிலை உள்ளது
அவ்வளவு கவனம் குறைபாடு உள்ளது கூவம் கதையை பேசத் தொடங்கினால் இன்னும் மறக்கப்படவில்லை. கடந்த காலங்களில் கூவத்தை சரிபரிந்து இருந்தால் இன்றைக்கு இந்த பிரச்சனை வந்திருக்காது
பாஜக அதிமுக இடையே இன்னும் தொகுதி பங்கீடு இடங்களோ இன்னும் பேச்ச ஆரம்பிக்கவில்லை.
அது முடிந்த பிறகு தான் பாஜக எத்தனை தொகுதிகள் மட்டுமல்லாதுஎந்தெந்த தொகுதியில் போட்டியிடுகிறது என்பது தெரியவரும்.
ஆனால் பாஜகவை பொறுத்தவரை 234 தொகுதிகளிலும் களத்தில் நாங்கள் வேலை செய்கிறோம்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விருந்து சென்றவர்கள் மீண்டும் சேர்வதற்கு காலம்தான் முடிவு செய்யும்.
திமுக அரசு எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளை அடிக்கும் அதை இடி கேட்கக் கூடாது என்று கூறினால் என்ன செய்வது வேண்டுமானால் அமலாக்கத்துறை கலைக்க சொல்லுங்கள்.








