• Sat. Nov 14th, 2026

விழுதுகள் பவுண்டேஷன் சிவகாசி ஜேசிஐ அமைப்பின் சார்பில் சிலம்பு போட்டிகள்..,

ByK Kaliraj

Nov 14, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வ நத்தத்தில் சண்முகா தொடக்கபள்ளியில் குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு விழுதுகள் பவுண்டேஷன் சிவகாசி ஜேசிஐ அமைப்பின் சார்பில் சிலம்பு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் தாயில்பட்டி நாடார் ஜார்ஜ் உயர்நிலைபள்ளியை சேர்ந்த 9 மாணவிகள் கலந்து கொண்டனர். இரண்டு மாணவிகள் முதலிடமும் ஏழு மாணவிகள் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.

பரிசு பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ரத்தினகுமார் பள்ளி நிர்வாக கமிட்டியினர் வாழ்த்து தெரிவித்தனர்.