• Fri. Dec 13th, 2024

போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சைக்கிளில் பேரணியாக சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

ByG.Suresh

Jun 26, 2024

சிவகங்கை அரண்மனை வாசலில் சிவகங்கை காவல்துறையின் சார்பில் போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்தப் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் தொடங்கி வைத்து மாணவர்களுடன் அவரும் சைக்கிள் பேரணியாக சென்று
நகரின் முக்கிய வீதிகளான காந்தி வீதி, மதுரைமுக்கு, அம்பேத்கர் சிலை, சாமியார் பட்டி, ஆகிய பகுதிகளின் வழியாகசென்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது முன்னதாக சட்டவிரோதமான போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள், பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும்நிலையில் இளைய சமுதாயம் போதை பொருட்களுக்கு அடிமையாகி எதிர்காலத்தை தொலைக்காமல் தடுப்பதற்காக, காவல் அதிகாரிகள் தலைமையில், பொது இடங்களில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசுரங்களும் வழங்கப்பட்டது இந்த சைக்கிள் பேரணியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.