கரூரில் உள்ள பசுமைப் பள்ளியில் சூழல் நூலகத்தை இன்று மாவட்ட கல்வி அலுவலர் திறந்து வைத்தார். கரூர் மாவட்டத்தில் உள்ள பசுமை பல ளிகளில் ஒன்றான புகழூர் அரசு பள்ளியில் சூழல் நூலகத்தை இன்று மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.

இந்த நூலகத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகம் மூலம் மாணவர்கள் இடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சுற்றுச் சூழலை காப்பது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவும் உள்ளது.