
மதுரை, அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக, 38வது தேசிய கண் தான வார விழா 25 ஆகஸ்ட் 23 முதல் 8 செப்டம்பர் 23 வரை கொண்டாடப்படுகிறது. இதன் முதல் நிகழ்வாக இன்று பார்வையற்றோர் நடை (blind walk ) நிகழ்வானது நடைபெற்றது. இந்நிகழ்வை, மாவட்ட ஆட்சியாளர் சங்கீதா தொடங்கி வைத்து, கண்களை கட்டிக்கொண்டு நடந்து வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்நிகழ்வானது, அண்ணா பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து அரவிந்த் கண் மருத்துவமனை உள் நோயாளிகள் பிரிவு வரை சென்று முடிவடைந்தது. இந்தப் பேரணியின் நோக்கமாக பார்வையற்றோர் வாழ்க்கையில், உள்ள சிரமங்களை நாம் அனுபவித்து, அதற்குள்ள தீர்வாகிய கண்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே,
இதில் அரவிந்த் கண் மருத்துவமனை முதன்மை கண் மருத்துவர் கிம், டாக்டர் கிருஷ்னதாஸ், ராமநாதன் மற்றும் மருத்துவர்கள்,பணியாளர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.
