


மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் தேமுதிக சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் தங்கராஜ் தலைமையில் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. தேமுதிக கொடியேற்றி இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. பேரூர் செயலாளர் கிருஷ்ணன், வடக்கு மாவட்ட அவைத் தலைவர் கர்ணன், கேப்டன் மன்றம் மேலக்கால் குமார், சோழவந்தான் பேரூர் அவைத் தலைவர் ஜெய வீரன் முன்னிலை வகித்தனர். வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி, அழகர்சாமி, கண்ணன் ,குமார், சுப்புலட்சுமி, கண்ணம்மா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

