விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகரில் பல ஆண்டுகளாக அரசு நிலத்தை குத்தகைக்கு எடுத்து திருமண மண்டபம் கட்டி வாடகைக்கு விட்டு பல கோடி வருவாய் ஈட்டி விட்டு பல ஆண்டுகளாக குத்தகை நிலுவை பணம் பல கோடிகள் கட்டப்படாத நிலையில், உயர்நீதிமன்ற ஆணையின்படி இராஜபாளையத்தில் அமைந்துள்ள குமாரசாமி ராஜா திருமண மண்டபம், சிங்க ராஜா கடைகள் மற்றும் தேவர் திருமண மண்டபம் உள்ளிட்ட குத்தகைகளை நிலங்களை உயர்நீதிமன்ற உத்தரவின் படி மாவட்ட நிர்வாகம் ரத்து செய்து ஆணையிட்டுள்ளது.

நீண்ட காலமாக அரசு புறம்போக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை மீட்கும் நடவடிக்கைகளில் விருதுநகர் மாவட்டத்தில் இது ஒரு முக்கியமான முன்னெடுப்பாக இது கருதப்படுகிறதது.