• Thu. Apr 25th, 2024

ராணுவ தளபதி பிபின் ராவத் மரணம் தேசத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு .அதிமுக தலைமைக்கழகம் அறிக்கை .

அதிமுக தலைமை கழகம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,


இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் அவர்களும், அவருடைய மனைவியும் ,,மேலும் சில ராணுவ உயர் அதிகாரிகளும் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற இருந்த தேசிய அளவிலான பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ராணுவ உயர் அதிகாரிகளுடன் சென்றபோது ,அவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் விமானம் விபத்துக்குள்ளாகி, அவர்களில் ஹெலிகாப்டர் பைலட் ஒருவரைத் தவிர மற்ற 13 பேர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு ,மிகுந்த துயரம் அடைந்தோம்.

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவர்கள் அஞ்சா நெஞ்சமும் ,வீரமும் கொண்ட தேசபக்தர் என்று அனைவராலும் போற்றப்படுபவர் .அவருடன் பயணித்த நம் ராணுவத்தின் மற்ற அதிகாரிகளும் தேசத்தின் பாதுகாப்பிற்காக தங்களை அர்ப்பணித்து பணியாற்றிய வீரர் பெருமக்கள். அவர்களுடைய மரணம் தேசத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

விபத்தில் உயிரிழந்து இருக்கும் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் ஆகியோருக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம் ,அவர்களின் குடும்பத்தினருக்கும் ,உறவினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் .உயிரிழந்தோரின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *