• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புதுவை தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளூர் சிலை அமைக்கப்பட்ட தினம்

ByB. Sakthivel

Mar 20, 2025

புதுவை தமிழ்ச் சங்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 20 ம் தேதி
திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டது. அது முதல் ஒவ்வொரு மாதமும் 20-ம் தேதி திருவள்ளுவர் சிலைக்கு தமிழ்ச்சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து குறள் ஒப்புவிப்பது வழக்கம்.திருக்குறளை மாணவர் மத்தியில் கொண்டு செல்வதற்கும் இந்த நிகழ்வை தமிழ்ச் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் 63 வது மாதமாக இன்று 20 ஆம் தேதி என்பதனால் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தமிழ் சங்கத் தலைவர் முத்து, செயலாளர் சீனு மோகன்தாஸ் மற்றும் பள்ளி மாணவர்கள் மத்தியில் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழ் சங்க நிர்வாகிகள் சார்பில் திருக்குறள் புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பணி புரியும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் இன்னல்களை கலைவது குறித்த புகார் குழுவினருக்கு தமிழ் சங்கத்தின் சார்பில் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் குழுவின் சேர்மன் ஹேமாவதி மற்றும் உறுப்பினர்கள் மயில், ஜெயலஷ்மி, ஜெயந்தி ராஜவேலு, உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.