



புதுச்சேரியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில்
குடும்ப தலைவிக்கு தலா 1000 ரூபாய் வழங்கி வருகிறது. இந்த தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

புதுச்சேரியில் 21 வயது பூர்த்தியடைந்து 55 வயது மிகாமல் இருக்கும் அரசின் எவ்விதமான மாதாந்திர உதவி தொகையும் பெறாத வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் அனைத்து குடும்பத் தலைவருக்கும் மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த நிதி 2500 ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இதள்கு 786.56 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. குடும்பத் தலைவி நிதி உதவி திட்டத்தின் கீழ் தற்போது வரை 56,000 பயன்பெற்று வருகின்றனர்.


இந்த நிலையில் இன்று பட்ஜெட் உரை மீது உறுப்பினர்கள் தங்களது பேசியதை தொடர்ந்து முதல் அமைச்சர் ரங்கசாமி பதில் அளித்தார்.அப்போது அவர், சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான சேதராப்பட்டு நிலத்தில் தொழிற்பேட்டை விரைவில் அமையும் என்றும் சிவப்பு அட்டை வைத்துள்ள குடும்ப தலைவிக்கு மாத உதவி தொகை 1000 த்தில் இருந்து 2500 ரூபாய் வழங்கப்படுகிறது.
மஞ்சள் அட்டை வைத்துள்ள கோட்டிற்கு மேல் வாழும் குடும்ப தலைவிக்கும் மாத உதவி தொகை வழங்க உறுப்பினர்கள் கோரியதை தொடர்ந்து அவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என முதல் அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்…

