• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்த குற்றவாளிகள் போலீசாருக்கு பயந்து தப்பி ஓட்டம்….

சேலத்தில் பிரபல ரவுடி கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த 5 பேர் மீண்டும் கைதாகிவிடுவோம் போலீசாருக்கு பயந்து தப்பி சென்ற பரபரப்பு காட்சிகள்.

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி செல்லதுரை கடந்த 22.12.2020 அன்று ரவுடி கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


இவர்களில் விக்னேஷ், சுரேஷ், பாலமுருகன், சின்னவர், சாரதி ஆகிய 5 பேருக்கு பிணை கிடைக்கப்பெற்றதை அடுத்து 5 பேரும் இன்று இரவு வெளியே வருவது குறித்து தகவல் வெளியானது. மேலும் சிறை முன்பு போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர். சிறையில் இருந்து வெளியே வரும்போது 5பேரையும் போலீசார் மீண்டும் கைது செய்யப்போவதாக கிடைத்த தகவலின்பேரில் அவர்களின் உறவினர்கள் சிறைவாசல் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர்.

இந்தநிலையில் சிறைக்குள் இருந்து வெளியே வந்த 5 பேரும் போலீசாரை கண்டு தயங்கி நின்றனர். அப்போது சிறைக்காவலர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். ஆவேசமாக வெளியே வந்த அவர்களை, அவர்களது உறவினர்கள் சூழ்ந்துகொண்டு கூச்சலிட்டனர். பின்னர் திடீரென்று அவர்கள் ஆட்டோவிலும், இருசக்கர வாகனத்திலும் ஏறி கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர்.


சிறையில் இருந்து வெளியே வந்த 5 பேரும் சிறைவாசலில் போலீசாருக்கு பயந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோவில் ஏறி தப்பி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.