நமது நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு, வரலாறு காணாத அளவில் உயர்ந்திருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு வரலாறு காணாத அளவாக 704.89 பில்லியனை கடந்து சாதனை படைத்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தொடர்ந்து 7 வாரமாக அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 12.6 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது.
சீனா, ஜப்பான், ஸ்விட்சர்லாந்துக்கு அடுத்தபடியாக 700 பில்லியன் டாலர் அந்நிய செலாவணியை கையிருப்பில் வைத்திருக்கும் நான்காவது நாடு என்ற பெருமையை இதன் மூலம் இந்தியா பெற்றுள்ளது.