பல்லடம் நகராட்சிக்கு உடபட்ட 18 வார்டில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் வாட்டர் மேன்கள் பணியாற்றி வருகின்றனர். இரவு பகல் பாராமல் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் தூய்மை காவலர்களின் தாகத்தை போக்கும் வகையில் 18 ஆவது வார்டு கவுன்சிலர் சசிரேகா ரமேஷ்குமார் மற்றும் பாஜக நகர் மன்ற உறுப்பினர் ரமேஷ்குமார் ஆகிய இருவரும் தூய்மை பணியாளர்களுக்கு பயன்பெறும் வகையில் 3000 குளிர்பானங்களை இன்று பல்லடம் நகராட்சி ஆணையர் மனோகரன், சுகாதார ஆய்வாளர் சத்யா ஆகியோரிடம் இன்று வழங்கினர்.

ஒவ்வொரு தூய்மை பணியாளர்களுக்கும் நாள் ஒன்றுக்கு மூன்று குளிர்பானங்கள் என்ற வீதத்தில் பத்து நாட்களுக்கு 3000 குளிர்பானங்களை வழங்கியுள்ளனர்.








