• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

அரசுப் பேருந்தில் தனியாக கல்லா கட்டி வந்த கண்டக்டர் கைது..!

Byவிஷா

Nov 17, 2023

அரசுப் பேருந்தில் பயணிப்பவர்களிடம் போலி டிக்கெட் கொடுத்து கல்லா கட்டி வந்த கண்டக்டரை அதிகாரிகள் அதிரடியாக ரெய்டு நடத்தி கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்திலிருந்து சிதம்பரத்திற்கு அரசு ஏசி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் முறையான கலெக்ஷன் வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்து வந்தனர். ஆனால், பேருந்தில் பயணிகள் கூட்டம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, இதை கண்காணித்து வந்த அதிகாரிகள், இந்த ஏசி பேருந்து கிராமம் கிராமமாக நின்று செல்வதை அறிந்தனர். இதுதொடர்பாக பயணிகள் கண்டக்டர், டிரைவரிடம் வாக்கு வாதம் செய்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இநத் நிலையில், நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் இந்த பேருந்தை அதிகாரிகள் மடக்கினர். விருத்தாசலத்தை அடுத்த வடலூர் வந்த போது அங்கு போக்குவரத்து கழகத்தின் செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் பேருந்தை நிறுத்தி ஏறி சோதனை நடத்தினர். அப்போது கண்டக்டரிடம் இருந்த டிக்கெட்டுகளை சோதனை செய்தனர். அதில் சீரியல் எண்ணை வைத்து சோதித்த போது அவை போலி டிக்கெட்டுகள் என தெரியவந்தது.
இதையடுத்து, போலி டிக்கெட் தொடர்பாக சிதம்பரத்தில் உள்ள பெரியார் பஸ் டிப்போவில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு அந்த பேருந்தை டிக்கெட் பரிசோதகர்கள் கைப்பற்றினர். பேருந்தில் இருந்த பயணிகளை அவரவர் நிறுத்தங்களில் இறக்கிவிட்டுவிட்டு பின்னர் பேருந்தை காலியாகவே எடுத்துக் கொண்டு சென்றனர். அந்த போலி டிக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. அது போல் அங்கிருந்த பயணியிடமும் பேருந்தை ஆங்காங்கே நிறுத்தி பயணிகளை ஏற்றியது, போலி டிக்கெட் விற்பனை செய்தது குறித்து சாட்சியாக எழுதி வாங்கிக் கொண்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே கடந்த ஆகஸ்டு மாதம் தேனி மாவட்டத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றது. தேனி மாவட்டம் கம்பம் பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துகளில் ஒருவர் அரசு பேருந்து நடத்துநரின் உடை அணிந்து நடத்துநர்கள் வைத்திருக்கும் பேக்குடன் அதில் வைத்திருந்த பயணச் சீட்டுகளை பேருந்தில் இருந்த பயணிகளிடம் பணத்தை பெற்றுக் கொண்டு தன்னிடம் இருந்த பயணச் சீட்டுகளை விநியோகம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அரசுப் பேருந்தின் நடத்துநர் தனக்கு பதிலாக வேறொரு நபர் பேருந்தில் பணியில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த நபரிடம் நடத்துநர் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்து நடத்துநர் பேட்ஜ், கைப்பை, பயணச்சீட்டுகளை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.