

மலையாள சினிமாவிலும், மம்முட்டியின் திரையுலக வாழ்க்கையிலும் மாற்றங்களுக்கு அடித்தளமிட்டது சிபிஐ டைரிக்குறிப்பு நாவல்களை, மக்கள் வாழ்வியலை மட்டும் திரைப்படமாக தயாரித்துக்கொண்டிருந்த மலையாள சினிமா மம்முட்டி நடிப்பில் 34 வருடங்களுக்கு முன்பு வெளியான சிபிஐ படத்திற்கு பின் விசாலமான பார்வைக்கு வந்தது திரைப்பட தயாரிப்பில் கிரைம் திரில்லர், பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிப்பு என மாற்றம் கண்டது இந்திய சினிமாவில் குறிப்பிட்ட ஒரு படம் ஐந்து பாகங்கள் தயாரிக்கப்பட்டதில்லை சிபிஐ டைரிக்குறிப்பு கடந்த 34 ஆண்டுகளில் இதுவரை நான்கு பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. தற்போது ஐந்தாம் பாகம் ‛சிபிஐ 5 தி பிரைன்’ என்ற பெயரில் தயாராகி உள்ளது. முதல் நான்கு பாகங்களை இயக்கிய கே.மதுவே இந்த படத்தையும் இயக்கி உள்ளார். படப்பிடிப்பு முடிந்துவெளியீட்டுக்கான வேலைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தணிக்கையில் U/A சான்று பெற்றுள்ள இந்த படம் மே 1ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய தகவலை நடிகர் மம்முட்டி வெளியிட்டுள்ளார்.
