கோவை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகரத்தை அழகுப்படுத்தும் விதமாக ரவுண்டானா இடங்களில் சிலைகள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதேபோல பல்வேறு இடங்களில் சிலைகள் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக உப்பிலிபாளையம் அருகே உள்ள ரவுண்டானாவில் தொழில் நகரத்தை மையப்படுத்தி கையில் உளியால் தன்னைத் தானே செதுக்கும் விதமாக தொழிலாளர் சிலையை அனிகா தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டது.

இதனை கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் திறந்து வைத்தனர். இந்த சிலை வாகன ஓட்டிகளை கண் கவர செய்துள்ளது.






