• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில்ஆடைக் கண்காட்சி..!

BySeenu

Feb 13, 2026

பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் ஆடை மற்றும் ஆடை வடிவமைப்புத் துறை சார்பில், எவன்சா 2026 எனும் ஆடைக் கண்காட்சி மற்றும் கல்லூரி விழா இரண்டு நாட்கள் நடைபெற்றது.

கண்காட்சியில், பி.எஸ்சி, எம்.எஸ்சி, ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் பாடப்பிரிவுகளைச் சேர்ந்த மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட 15 சுற்றுகளில் 150-க்கும் மேற்பட்ட பிரத்யேக ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டன. நிகழ்ச்சியை ஜி.ஆர்.ஜி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் நந்தினி ரங்கசாமி வரவேற்புரை ஆற்றினார்.

மும்பை கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் குளோபல் பிசினஸ் டெவலப்மென்ட் தலைவர் ஸ்ரீ முருகன் தென்கொண்டார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ஃபேஷன் துறையில் உருவாகி வரும் தொழில்முறை வாய்ப்புகள் குறித்து உரையாற்றினார்.

எவன்சா 2026 தொடர்பான அறிக்கையை ஆடை மற்றும் ஆடை வடிவமைப்பு டீன் டாக்டர். சாந்தி ராதாகிருஷ்ணன் வழங்கினார். துறைத் தலைவர் டாக்டர் ஆர்.
திவ்யா நன்றி கூறினார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, முதலாம் ஆண்டு மாணவிகளின், ‘குழந்தைகள் ஆடைக் காட்சி’, இரண்டாம் ஆண்டு மாணவிகளின் கருப்பொருள் ஆடைக் காட்சிகள் நடைபெற்றன. காலை அமர்வுகளுக்கு அனுபமா மாரிமுத்து, ‘ எம். வருண்யா தேவி, ராதா நந்தகி ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர். மூன்றாம் ஆண்டு மற்றும் ஐபிஜி மாணவிகள் வழங்கிய கருப்பொருள் நிகழ்ச்சிகளின் பிற்பகல் அமர்விற்கு, டாக்டர் கவிதா மற்றும் ஷில்பா சுதர்சன் நடுவர்களாக இருந்தனர்.