புதுக்கோட்டை மாவட்டம் உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு
பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது;
தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், ஒவ்வொரு வருடமும் ஜுலை 11 ஆம் நாள் உலக மக்கள்தொகை நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு உலக மக்கள்தொகை நாள் ஜூலை 11 முதல் 18 வரை அனுசரிக்கப்பட உள்ளது.

இவ்வருடத்தின் கருப்பொருளாக, “ஆரோக்கியமான போதிய இடைவெளியுடன் பிள்ளைப்பேறு, திட்டமிட்ட பெற்றோர்கான அடையாளம்” மற்றும் முழக்கமாக, “உடலும் மனமும் பக்குவமடைந்து உறுதியாகும் வயது 21. அதுவே பெண்ணுக்கு, திருமணத்திற்கும் தாய்மையடைவதற்கும் உகந்த வயது” ஆகும்.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மாவட்ட குடும்பநல அமைப்பு மூலம் உலக மக்கள்தொகை தினம் 2025 இன்றையதினம் அனுசரிக்கப்பட்டது.
இதில் குடும்பநல இயக்கத்தின் உறுதி மொழி ஏற்றுக்கொண்டு, செவிலிய மாணவ/ மாணவியர்களின் மூலம் பொதுமக்களிடையே மக்கள்தொகை பெருக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, குடும்பநல பிரச்சார விழிப்புணர்வு ஊர்தி துவக்கி வைத்து, செவிலியர் கல்லூரி மாணவ/ மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணியானது, பழைய தலைமை மருத்துவமனை வளாகத்தில் இருந்து, புதுக்கோட்டை மாவட்ட முக்கிய வீதிகளின் வழியாக பொதுமக்களிடையே குடும்பநல கருத்துக்களை கொண்டு சேர்க்கும் வகையில் நடைபெற்றது.
மேலும், உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு, செவிலியர் கல்லூரி மாணவியர்களிடையே நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவியர்களுக்கு, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் உள்ளிட்டவைகளில் அனைத்து வகையான குடும்பநல முறைகள் குறித்து விழிப்புணர்வுகள் மற்றும் சேவைகள் வழங்கப்படுகிறது.
எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தகுதிவாய்ந்த தம்பதியரும் சிறு குடும்பநல நெறியைப் உரிய முறையில் பின்பற்றி பயன்பெற வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, தெரிவித்தார். இந்நிகழ்வுகளில், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.எஸ்.கலைவாணி, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு.சா.ஸ்ரீபிரியா தேன்மொழி, மாவட்ட சுகாதார அலுவலர்கள் மரு.ராம்கணேஷ் (புதுக்கோட்டை), மரு.விஜயகுமார் (அறந்தாங்கி), துணை இயக்குநர் (மருத்துவம் குடும்பநலம்) மரு.அ.கோமதி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் (பொ) மரு.எல்.ரெங்கநாயகி, புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவர் திரு.எஸ்.சரவணன், செயலாளர் திரு.எல்.மருதுபாண்டியன், திட்டத் தலைவர் திரு.ஜி.எஸ்.எம்.சிவாஜி, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் திரு.மு.முத்தமிழ்செல்வன், ஆல் தி சில்ட்ரன் மேலாளர் திரு.ரவிக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.