• Thu. Aug 20th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

நீட் தேர்வில் நடந்துள்ள முறைக் கேடுகளை கண்டித்து கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

BySeenu

Jun 28, 2024

நீட் தேர்வில் நடந்துள்ள முறைக்கேடுகளை கண்டித்து கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் சுந்தராபுரம் பகுதியில் நடைபெற்றது

2024 நீட் தேர்வு முடிவுகளில் நடந்துள்ள முறை கேடுகள், வினாத்தாள் கசிவு, மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்கியதில் முறைகேடுகள் போன்ற காரணங்களுக்காக மத்திய பாஜக அரசை கண்டித்தும் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உரிய நியாயம் வழங்கக் கோரியும் , கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை மற்றும் குறிச்சி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி இணைந்து கோவை சுந்தராபுரம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை தலைவர் முகமது ஆரீப் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்,கோவை தெற்கு மாவட்ட தலைவர் பகவதி,வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..

ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, நீட் தேர்வில் முறைகேடுகள் செய்து மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் முகமது ஹாரூன், குறிச்சி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் முகமது இஸ்மாயில், மாநிலச் செயலாளர் பஷீர், மாநில பொறுப்பாளர் ஹாரிஸ், மாநில செயலாளர் அசார் மற்றும், சிறப்பு அழைப்பாளர்களாக, தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர்கள் திருநகர் மணி, முருகன், மதுசூதனன், முகமது ஈஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில சிறுபான்மை துறை தலைவர் முகம்மது ஆரீப், நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் பல்வேறு ஊழல் முறைகேடுகள் நடந்திருப்பதால்,நாடு முழுவதும், உள்ள பல்வேறு மாணவர்களின் கனவுகள் வீணாகி உள்ளதாகவும், பல்வேறு மாணவர்களின் எதிர்காலம் கேள்வி கூறியாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார். எனவே நீட் தேர்வு முறை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்..