

கன்னியாகுமரியில் 6.65 கோடி மதிப்பில் மகளிர் தொழில் கூடத்தை காணொளி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.
கன்னியாகுமரியில் 6.65 கோடி ருபாய் செலவில் பழச்சாறு மற்றும் தானிய வகை பிஸ்கட் உள்ளிட்ட பல்வகை உணவுப்பொருட்கள் தயாரிப்பு நிலையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் பகுதியில் பழச்சாறு மற்றும் தானிய வகை பிஸ்கட்களும் உள்ள பொது உபயோக மையத்தில் மகளிர் பல்வகை உணவுப்பொருட்கள் தயாரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
6.65 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த உணவுப் பொருள்கள் தயாரிப்பு நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அழகுமீனா குத்துவிளக்கேற்றி தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முற்றிலும் பெண்களால் செயல்படுத்தப்படவுள்ள இக்குழுமம் மூலம் நெல்லிக்காய், ஆரஞ்ச், தக்காளி, எலுமிச்சை, திராட்சை, மாம்பழம் ஆகியவற்றிலிருந்து பழச்சாறு மற்றும் தானிய வகை பிஸ்கட்களும் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக முருங்கையை அடிப்படையாக கொண்டு பல உபபொருட்கள், தேன் நெல்லிக்காய், எலுமிச்சை ஊறுகாய், மாம்பழ ஊறுகாய், முந்திரி பிஸ்கெட், தினை கலவை, உலர் மீன், மீன் ஊறுகாய், இறால் ஊறுகாய், இறால் பொடி, மூலிகை பொடிகள், தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை பொடி, லட்டுவகைள் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுப்பொருட்கள் தயார் செய்வதற்காக 60 இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தயாரிப்பு பொருட்களை வெளிமாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு விரிவுப்படுத்தி, சந்தைப்படுத்தி வருமானம் ஈட்டுவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் சிட்கோ கண்காணிப்பாளர் மாரியம்மாள், ஸ்டெல்லாமேரி சமுதாய கல்வி மேம்பாட்டு இயக்குநர் அருட்சகோதரி லிஸ்டர் அர்ச்சனா, உதவி இயக்குநர் அருட்சகோதரி லிஸ்டர் ஜின்சி, இல்லத்தலைவி அருட்சகோதரி லிஸ்டர் லீமா, மகளிர் சுயஉதவிக்குழுவினர், தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

