



கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கையில் மக்களின் ரூ.26.46 லட்சம் காணிக்கையாக கிடைத்துள்ளது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 18 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. 2 மாதம் ஒருமுறை உண்டியல்கள் திறந்து காணிக்கை பணம் எண்ணப்பட்டு வருகிறது. இன்று(மார்ச்_25) காலை உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி நடந்து வருகிறது.


குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில், இணை ஆணையர் பழனிக்குமார், கோயில் மேலாளர் ஆனந்த் J கணக்காளர் கண்ணதாசன் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர். கல்லூரி மாணவிகள், சுய உதவிக்குழு பெண்கள் உண்டியல்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


காலை தொடங்கிய பக்த்தர்களின் காணிக்கையை எண்ணும் பணி மாலை நிறைவு பெற்றது. இதில் மொத்தம் காணிக்கை பணம் ரூ.26,46,153, தங்கம் 32.950 கிராம் காணிக்கையாக 17_உண்டியல்கள் மூலம் கிடைத்துள்ளது.



